Mluvčí: Nithia

Jazyk Tamilština wiki ethnologue
Drávidská jazyková rodina wiki
tamilské písmo scriptsource
Římskokatolická církev wiki

Znamení kříže

தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே. ஆமென்
Přibližná transliterace do latinky
Tantai makaṉ tūya āviyiṉ peyarālē. Āmeṉ

Otčenáš

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக! எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்
Přibližná transliterace do latinky
Viṇṇulakil irukkiṟa eṅkaḷ tantaiyē, umatu peyar tūyatu eṉap pōṟṟappeṟuka! Umatu āṭci varuka! Umatu tiruvuḷam viṇṇulakil niṟaivēṟuvatu pōla maṇṇulakilum niṟaivēṟuka! Eṅkaḷ aṉṟāṭa uṇavai iṉṟu eṅkaḷukkut tārum. Eṅkaḷukku etirākak kuṟṟam ceyvōrai nāṅkaḷ maṉṉippatu pōla eṅkaḷ kuṟṟaṅkaḷai maṉṉiyum. Eṅkaḷai cōtaṉaikku uṭpaṭuttātēyum. Tīyōṉiṭamiruntu eṅkaḷai viṭuvittaruḷum. Āmeṉ

Zdrávas Maria

அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே, பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே, உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே. தூய மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும். ஆமென்
Přibližná transliterace do latinky
Aruḷ mikap peṟṟa mariyē vāḻka! Āṇṭavar um'muṭaṉē, peṇkaḷukkuḷ āci peṟṟavar nīrē, um'muṭaiya tiruvayiṟṟiṉ kaṉiyākiya iyēcuvum āci peṟṟavarē. Tūya mariyē, iṟaivaṉiṉ tāyē, pāvikaḷāy irukkiṟa eṅkaḷukkāka ippoḻutum eṅkaḷ iṟappiṉ vēḷaiyilum vēṇṭikkoḷḷum. Āmeṉ

Sláva Otci

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாகுக. தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்
Přibližná transliterace do latinky
Tantaikkum makaṉukkum tūya āviyārukkum māṭcimai uṇṭākuka. Toṭakkattil iruntatupōla ippoḻutum eppoḻutum eṉṟeṉṟum iruppatāka. Āmeṉ

Apoštolské vyznání víry

விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த, எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகிறேன். அவருடைய ஒரே மகனாகிய, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் நம்புகிறேன். இவர் தூய ஆவியாரால் கருவாகி, தூய கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையப்பட்டு, இறந்து அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள், இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். விண்ணகம் சென்று, எல்லாம் வல்ல தந்தையாகிய, கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து, வாழ்வோருக்கும் இறந்தோருக்கும், தீர்ப்பு வழங்க மீண்டும் வருவார். தூய ஆவியாரை நம்புகிறேன். தூய கத்தோலிக்கத் திருச்சபையையும், புனிதர்களுடைய சமூக உறவையும் நம்புகிறேன். பாவ மன்னிப்பை நம்புகிறேன். உடலின் உயிர்ப்பை நம்புகிறேன். நிலை வாழ்வை நம்புகிறேன். ஆமென்
Přibližná transliterace do latinky
Viṇṇakattaiyum maṇṇakattaiyum paṭaitta, ellām valla tantaiyākiya kaṭavuḷai nampukiṟēṉ. Avaruṭaiya orē makaṉākiya, nam āṇṭavar iyēcu kiṟistuvaiyum nampukiṟēṉ. Ivar tūya āviyārāl karuvāki, tūya kaṉṉi mariyāviṭamiruntu piṟantār. Pontiyu pilāttiṉ atikārattil pāṭupaṭṭu, ciluvaiyil aṟaiyappaṭṭu, iṟantu aṭakkam ceyyappaṭṭār. Pātāḷattil iṟaṅki, mūṉṟām nāḷ, iṟantōriṭamiruntu uyirtteḻuntār. Viṇṇakam ceṉṟu, ellām valla tantaiyākiya, kaṭavuḷiṉ valappakkattil vīṟṟirukkiṟār. Avviṭattiliruntu, vāḻvōrukkum iṟantōrukkum, tīrppu vaḻaṅka mīṇṭum varuvār. Tūya āviyārai nampukiṟēṉ. Tūya kattōlikkat tiruccapaiyaiyum, puṉitarkaḷuṭaiya camūka uṟavaiyum nampukiṟēṉ. Pāva maṉṉippai nampukiṟēṉ. Uṭaliṉ uyirppai nampukiṟēṉ. Nilai vāḻvai nampukiṟēṉ. Āmeṉ